Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: dean

சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம்!

சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம்!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலர் / கூடுதல் இயக்குநராக பணியாற்றி வரும் சாந்திமலர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள வசந்தாமணி, இதுவரை சாந்திமலர் வகித்து வந்த இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, சிவகங்கை மருத்துவக்கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வர் முருகேசன், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்
சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வராக இருதயவியல் துறை மருத்துவர் திருமால்பாபு (55) இன்று (ஜனவரி 29, 2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.   சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ், கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜூலை 5, 2018ம் தேதி, பிளாஸ்டிக் சர்ஜரி துறை மூத்த மருத்துவர் எம்.கே.ராஜேந்திரன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார்.   சேலம் மட்டுமின்றி, முதல்வர் பணியிடம் காலியாக இருந்த தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் புதிதாக முழுநேர முதல்வர்களை நியமித்து, தமிழக அரசு கடந்த ஆண்டு செப். 12ம் தேதி உத்தரவிட்டது. அப்போது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வ
சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு கட்டுரை -   சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இருதய சிகிச்சை டாக்டர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் அந்த துறையையே இழுத்து மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.   சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள இருதய நோய் சிகிச்சைத்துறையில், டாக்டர் கண்ணன் துறைத்தலைவராக உள்ளார். இவர் உள்பட டாக்டர்கள் குணசேகரன், முனுசாமி, தங்கராஜ், பச்சையப்பன், ஞானவேல், சுரேஷ்பிரபு ஆகிய ஏழு பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் டாக்டர் முனுசாமி மீது துறைத்தலைவர் கண்ணன் உள்பட ஆறு டாக்டர்களும் மருத்துவமனை டீன், மாவட்ட கலெக்டர், மருத்துவக்கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை செயலர் வரை புகார் மேல் புகார் தட்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.   ஒருகட்டத்தில், கைகலப்பு வரையிலும் சென்றதாக கூறும் பிற துறை மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் இப்போது கார்டியாலஜி டாக