Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில், வரும் 23ம் தேதி
முதல் மாணவர் சேர்க்கை
கலந்தாய்வை தொடங்குமாறு
கல்லூரிக்கல்வி இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 143 அரசு கலை,
அறிவியல் கல்லூரிகள்
செயல்பட்டு வருகின்றன.
இக்கல்லூரிகளில் சேர
ஏற்கனவே விண்ணப்பங்கள்
பெறப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நடப்புக் கல்வி
ஆண்டுக்கான மாணவர்
சேர்க்கைக் கலந்தாய்வை
வரும் 23ம் தேதி முதல்
தொடங்க கல்லூரிக்கல்வி
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

 

செப். 3ம் தேதிக்குள்
மாணவர் சேர்க்கையை
நடத்தி முடிக்கவும்
அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றின்
தாக்கத்தைப் பொறுத்து
அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள்
ஆன்லைன் அல்லது நேரடி
கலந்தாய்வு மூலம் மாணவர்
சேர்க்கை நடத்திக்கொள்ள
வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டு உள்ளன.

 

பிளஸ்2 மதிப்பெண்
சான்றிதழ், இதர சான்றிதழ்களை
சரிபார்த்த பின்னரே
சேர்க்கையை உறுதி செய்ய
வேண்டும் எனவும்,
சேர்க்கையின்போது
வன்னியர்களுக்கு 10.5 சதவீத
உள் இடஒதுக்கீட்டை பின்பற்ற
வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

– பேனாக்காரன்