Saturday, May 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மற்றவை

விவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

விவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், காவல்துறை எஸ்ஐ விவசாயியை அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து ஆத்தூர் நீதித்துறை நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி பதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயி. இவரும், இவருடைய நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் ஜூன் 22ம் தேதி மாலை, பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி வழியாக சென்றனர். அப்போது மூவரும் மது போதையில் இருந்தனர். இந்த சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் சில காவலர்களும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.   காவல்துறையினர் அவர்களுடைய வாகனத்தை சோதனையிட முயன்றபோது, முருகேசன் அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இரு தரப்பு
சேலத்தில் ஒரு சாத்தான்குளம்; விவசாயியை அடித்துக் கொன்ற போலீஸ்!

சேலத்தில் ஒரு சாத்தான்குளம்; விவசாயியை அடித்துக் கொன்ற போலீஸ்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, குடிபோதையில் வந்த விவசாயியை காவல்துறை சிறப்பு எஸ்ஐ ஒருவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயி. இவரும், இவருடைய நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர் ஆகியோரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஜூன் 22ம் தேதி மாலை பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடி வழியாகச் சென்றனர்.   சோதனைச் சாவடியில் ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருகேசன் உள்ளிட்ட மூன்று பேரும் மது போதையில் இருந்துள்ளனர். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் காவலர்கள், முருகேசனிடம் வாகனத்திற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால்
ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் சற்று ஈர்ப்பு அதிகம். தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்டு விய
நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!

நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!

இலக்கியம், முக்கிய செய்திகள்
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் மானுடப் பிறவிக்கு மட்டுமேயானது. காதலில் விழுந்தோர்க்கு வெற்றி, தோல்வி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காதல் மட்டும் தோற்பதில்லை. இப்பிறவியில் காதல் அனுபவங்கள் இல்லாதவர்கள், எத்தகைய சுகபோகங்களை பெற்றவராக இருந்தாலும் கூட, ஒரு வகையில் குறை உடையவர்களாகவே கருதுகிறேன். காதலே தலைமை இன்பம் என்கிறான் பாரதி. காதலிப்போருக்கு மரணம் பொய்யாகும்; கவலைகள் போகும்; ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே! என்று அறைகூவல் விடுக்கின்றான்.   மார்க்ஸ் - ஜென்னியின் காதல் பேசப்பட்ட அளவுக்கு, செல்லம்மா மீது பாரதி கொண்ட அளப்பரிய காதல் பேசப்படவில்லை.   நாமும் இப்போது பாரதியைப் பற்றி பேச வரவில்லை. 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் மீண்டும் சங்க இலக்கியமான குறுந்தொகையில் இருந்து இன்னொரு காதல் பாடலைப் பற்றி பேசுவோ
நாமக்கல்: 14 வயது சிறுமியை ‘வேட்டையாடிய’ 12 பேர்; சீரழித்த அரசு ஊழியர்; விருந்தாக்கிய மாமா!

நாமக்கல்: 14 வயது சிறுமியை ‘வேட்டையாடிய’ 12 பேர்; சீரழித்த அரசு ஊழியர்; விருந்தாக்கிய மாமா!

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை அக்காள் கணவரே சீரழித்ததோடு, நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரமும் அரங்கேறியுள்ளது. இதில், பிஎஸ்என்எல் அதிகாரியும் சிக்கியுள்ள நிலையில், 12 பேரை கூண்டோடு கைது செய்திருக்கிறது காவல்துறை.   நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (55). இவருடைய மனைவி லட்சுமி (45). தறித்தொழிலாளிகள். இவர்களுக்கு மூன்று மகள்கள்; ஒரு மகன். மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இளைய மகள் செல்வி (14). (பெற்றோர் மற்றும் செல்வியின் பெயர்கள் புனையப்பட்டவை).   சந்திரசேகருக்கு உடல்நலம் சரியில்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக படுத்த படுக்கையாக இருக்கிறார். தந்தையை கவனித்துக் கொள்வதற்காக சிறுமி செல்வி, 6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார். செல்வியின் மூத்த அக
முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
நளன் - தமயந்தி இணையரின் காதல் வாழ்வு பற்றிய பாடல் தொகுப்புதான் நளவெண்பா. என்றாலும், தேனினும் இனிய உவமைகளும், உவமேயங்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பு நளவெண்பாவுக்கு உண்டு. புகழேந்தி புலவரின் கற்பனையின் ஆழத்தை ஒவ்வொரு பாடலிலும் உணர்ந்து கொள்ள முடியும். நளவெண்பாவின் கலித்தொடர் காண்டத்தில் கானகத்தில் இயல்பாய் நிகழ்ந்த காட்சியொன்றை தன் கற்பனைத் திறத்தால் சாகாவரம் பெற்ற பாடலாக்கி இருக்கிறான் புகழேந்தி புலவன். அந்தப் பாடல்...   ''மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தை பங்கயம் என்றெண்ணிப் படிவண்டை - செங்கையால் காத்தாளக் கைம்மலரை காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தாளைக் காணென்றான் வேந்து'' (184)   என்கிறான் புகழேந்தி புலவன்.   கானகத்தில் அழகான, ஒளி வீசக்கூடிய முகம்கொண்ட பெண்ணொருவள், மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது
போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், வழக்கம்போல கனல் கக்குகிறது. இதுவரையிலான தமிழக தேர்தல் வரலாற்றில், இந்த தேர்தலானது அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மக்களும் கூட, தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வழக்கத்தை விடவும் கூடுதல் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.   நாளை (ஏப். 6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள இந்த கடைசி நிமிடத்தில், திருவாளர் பொதுஜனங்களின் சிந்தனைக்காக சில சங்கதிகளை பேச விழைகிறேன். சற்றே நீளமான பதிவுதான். இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக கொஞ்சம் பொறுமை காத்து செவிசாய்க்க வேண்டுகிறேன்.   களத்தில் எத்தனை முனை போட்டி நிலவினாலும், நீங்கள் திமுக அல்லது அதிமுக கூட்டணி ஆகியவற்றில் ஒன்றைத்தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். எவற்றையெல்லாம் முன்வைத்து இங்கே ஒரு கூட்டணியை புற
கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''இந்த உலகத்துல நாம பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் காகிதம், தகரம், உடுத்தின பிறகு வீசப்படும் துணிமணிகள்னு எல்லாமே மறுசுழற்சி மூலமாக திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல பயன்பாட்டுக்கு வந்துடுது. அதனால இங்கே வேஸ்ட்னு எதுவுமே இல்ல. செத்ததுக்கப்புறம் எரித்து சாம்பலாகிடற மனுஷங்கள வேணும்னா வேஸ்ட்னு சொல்லலாம்,'' என போகிற போக்கில் வாழ்க்கையின் ஆகப்பெரும் தத்துவத்தை சொல்கிறார் மலர்மணி (37).   கொடிய வறுமையும், அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடமும்தான் அவரை இந்தளவுக்கு பக்குவமாக பேச வைத்திருக்கிறது. வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான் ஒருவரின் சிந்தனையும் அமைகிறது. அதற்கு மலர்மணியும் விதிவிலக்கு அன்று.   அவர் எதற்காக பழைய காகிதம், பழைய இரும்பை உதாரணமாகக் கூறினார் என்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.   சேலம் மாவட்ட
‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும்'' என்பதை மகாத்மா காந்தி, வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார். காந்தியின் நம்பிக்கை, யதார்த்த வாழ்விலும் பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதை என் கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.   இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சந்தித்த வெற்றிகரமான குடும்பத் தலைவிகள் பலருக்கும் காந்தியைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் கிடையாது. உழைக்கத் தயங்காத எவர் ஒருவரையும் இந்த பூமி நிராதரவாக விட்டுவிடுவதே இல்லை. சிலர் ஏணியை, கூரை மேல் எறிகிறார்கள். சிலர், வானத்தை நோக்கி வீசுகிறார்கள். ஆனால், 'உள்ளத்தனையது உயர்வு' என்பதுதான் நிஜம்.   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34), அவருடைய கணவர் கோவிந்தராஜூம் கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரண்டு மகள்
பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?

பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
உலகெங்கும் மாட்டு சாணம் பல்வேறு வகையில் பயன் தருகிறது. இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டு சாணியை வைத்து உருவாக்கப்படும் வரட்டி, சமையல் செய்ய எரிபொருளாகப் பயன்படுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலும் பயன்படுத்தி வந்துள்ளோம்.   மண் தரை, மண் சுவர் போன்றவற்றின் மீது மாட்டு சாணம் பூசும்போது பிணைப்பு பொருளாக மாறி மணல் துகள்கள் ஒன்றுடன் ஒன்று பிணையப் பயன்படுகிறது. காலம் காலமாக, உலகெங்கும், விவசாயிகள் மாட்டு சாணம் உட்பட கால்நடை கழிவுகளை எரு உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாட்டு சாணம் அதுவும் குறிப்பாக நாட்டு பசுவின் சாணம் கதிரியக்கத்தை 60 சதம் தடுத்து விடுகிறது என ஆய்வு கூறுவதாக பத்திரிகை செய்திகள் வருகின்றன. அதன் பின்னணியில் உள்ள ஆய்வு என்ன? அந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்து அறிவியலார்கள் எழு