Monday, December 1மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: கொரோனா தொற்று

சேலத்தில் நாளை முதல் இரு நாள்கள் முழு ஊரடங்கு! வெளியே நடமாடினால் கொரோனா பரிசோதனை!!

சேலத்தில் நாளை முதல் இரு நாள்கள் முழு ஊரடங்கு! வெளியே நடமாடினால் கொரோனா பரிசோதனை!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தொற்று சமூக பரவலாக மாறும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை (ஏப். 25), மற்றும் நாளை மறுநாள் (ஏப். 26) ஆகிய இரு நாள்களும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.   கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு, அரசு அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 14 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.   இதற்கிடையே, சேலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (ஏப். 23) உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நோய்த்தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வகையில் ஏப். 25 மற்றும் 26 ஆகிய ...