Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: wicket keeper

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா; ஆஸி.,யின் சோகம் தொடர்கிறது

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா; ஆஸி.,யின் சோகம் தொடர்கிறது

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி  3 - 0 புள்ளி கணக்கில் வென்றது. ஆஸி., அணியின் தோல்வி முகம் தொடர்ந்து வருவது, அந்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று உள்ளது. நேற்று (செப். 24) மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கார்ட்ரைட் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆரோன் பின்ச், ஹேன்ஸ்ட்கோம்ப் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆரோன் பின்ச் சதம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்ட
சாதனை: டோனி ‘100’ – கோஹ்லி ‘1000’

சாதனை: டோனி ‘100’ – கோஹ்லி ‘1000’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
டோனி: இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அந்த நாட்டு வீரர் தனஞ்ஜெயாவை டோனி, 'ஸ்டம்பிங்' செய்து அவுட் ஆக்கினார். இதன்மூலம், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் டோனி 100 வீரர்களை 'ஸ்டம்பிங்' முறையில் அவுட் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இலங்கையின் முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா (99 முறை) உள்ளார். கோஹ்லி: இலங்கை உடனான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கோஹ்லி இரண்டு முறை சதம் விளாசி உள்ளார். நடப்பு ஆண்டில், 18 ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லி  1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
டோனி ‘நாட்- அவுட்’ சாதனை!

டோனி ‘நாட்- அவுட்’ சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி, ஒரு நாள் போட்டிகளில் 73 முறை அவுட் ஆகாமல் இருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுவிட்ட டோனி, ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. இது, டோனிக்கு 300வது ஒரு நாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் டோனி, அவுட் ஆகாமல் 49 ரன்கள் எடுத்தார். இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் 100வது அரை சதம் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால், 50 ஓவர்களும் முடிந்து விட்டன. எனினும், அவர் மற்றொரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி