Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: vote counting

சேலம்: முதல் தேர்தலிலேயே பாமகவை கிளீன்போல்டு ஆக்கிய 22 வயது இளம்பெண்!

சேலம்: முதல் தேர்தலிலேயே பாமகவை கிளீன்போல்டு ஆக்கிய 22 வயது இளம்பெண்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பாமகவை வீழ்த்தி, 22 வயதே ஆன இளம்பெண் அபார வெற்றி பெற்றுள்ளார்.   சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் வீதம் மொத்தம் 20 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.   சேலத்தை அடுத்த, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வைஸ்யா கல்லூரியில் எண்ணப்பட்டன. அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்கம்பட்டி, பூவனூர் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 3வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மோகன் மனைவி பிரீத்தி என்பவர் திமுக சார்பில் உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட்டார். பிரீத்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 22 வயதே