துணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம்? குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை!!
தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு அனுப்பும் வரை புத்தகங்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரமே, நாங்கள் சொல்லித்தான் தெரியும் என்றும், பிரைடு நிர்வாகம் துணை வேந்தரிடம் முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
பெரியார் பல்கலை
சேலம் பெரியார் பல்கலையில் 'பிரைடு' என்ற பெயரில் தொலைநிலைக் கல்வி மையம் இயங்கி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும் 110 தனியார் படிப்பு மையங்களுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
படிப்பு மையம் மட்டுமின்றி ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் நேரடியாக சேரவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பாடப்புத்தகங்கள்
இது ஒருபுறம் இருக்க...