Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: vangani railway station

ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

இந்தியா, முக்கிய செய்திகள்
நாயகர்கள் பிறப்பதில்லை. சூழ்நிலைகளும் நிகழ்வுகளுமே நிஜ நாயகர்களை உலகுக்கு அவ்வப்போது அடையாளம் காட்டி விடுகிறது. அப்படி, நாடு போற்றும் நாயகனாக ஆனவர்தான் 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர் ஷெல்கே. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மத்திய வாங்கனி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார், மயூர் சகாராம் ஷெல்கே என்ற இளைஞர். ஏப். 17ம் தேதி, இந்த ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் தாயுடன் 6 வயது சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று, சிறுவன் கால் இடறி, நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழுந்துவிட்டான்.   பதறிப்போன தாய், மகனின் அழுகுரல் சத்தம் கேட்டு மேலும் பதற்றம் அடைகிறார். குழந்தையின் மரண ஓலம் வந்த திசையை அவரால் உணர முடியவில்லை. அப்போதுதான் அந்த தாய், பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி என்பதே தெரியவருகிறது. தொலைவி