Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: untouchability

விஜய் பட விவகாரம்: வக்கீலை மெர்சலாக்கிய ஹைகோர்ட்!

விஜய் பட விவகாரம்: வக்கீலை மெர்சலாக்கிய ஹைகோர்ட்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மதுபானம், தீண்டாமை என்று எவ்வளவு பிரச்னை இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு மெர்சல் படத்திற்கு தடை விதிக்க வழக்கு தொடர்ந்து, அந்தப்படத்திற்கு விளம்பரம் தேடித்தர வேண்டாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பு, டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற வசனங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று (அக்டோபர் 27, 2017) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞரிடம் பல கேள்விகளை எழுப்பியதோடு, கடும் கண்டனங்களையும் தெரிவித்தார். நாட்டுக்கு முக்கியமா? அப்போது நீதிபதி கூறுகையில், ''இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்ட கருத்
தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!!

தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
-குற்றம் கடிதல்-   'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவன் வாழ்ந்த பூமியில்தான் இன்னும் சாதிக் கொடுமைகளும், அதன்பேரில் நிகழும் வன்முறைகளும் ஓயாத அலைகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன.     ஆண்டான் அடிமை: பொதுவெளியில் வள்ளுவனையும், பாரதியையும் கூட்டணி சேர்த்துக்கொள்ளும் வெள்ளுடை வேந்தர்கள் யாருமே, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் ஆண்டான் அடிமை மனோபாவத்திலேயே இன்னும் தலித்துகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.   சேலம் மாவட்டம் கீரிப்பட்டி முதல்நிலைப் பேரூராட்சி கிராமம், இன்னும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்தும், ஒதுக்கி வைத்தலில் இருந்தும் மீளவே இல்லை. நாம் அந்தக் கிராமத்திற்கு சென்றபோது, தலித் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். அவர், அந்த ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் (நம்மிடம்) நீண்ட நேரம் நின்று பேசிக்க