Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: University Grants Commission

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் உடல்பருமனால் அவதிப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வளாகத்திலும் இனி நொறுக்குத்தீனிகள் (Junk Food) விற்கக்கூடாது என்று பல்கலை மானியக்குழு (யுஜிசி) அதிரடியாக தடை விதித்து உள்ளது.   இந்தியா எதிர்கொண்டுள்ள உடல்நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகளுள் ஒன்று, உடல்பருமன் (Obesity). 1975ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு உடல்பருமன் பிரச்னை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு நிலவரப்படி 30 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல்பருமனால் அவதிப்படுவதாக கூறுகிறது ஓர் ஆய்வு. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2025ல் இப்பிரச்னைக்கு 70 மில்லியன் பேர் இலக்காகக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த மருத்துவ ஆய்வு. பாட்டிக்கு இருந்த அதே பிரச்னை பேத்திக்கும் இருக்கலாம். அந்த வகையில் இது...
பெரியார் பல்கலை பேராசிரியர் பதவி இறக்கம்!; சிண்டிகேட் ஒப்புதல்

பெரியார் பல்கலை பேராசிரியர் பதவி இறக்கம்!; சிண்டிகேட் ஒப்புதல்

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலையில் பேராசிரியர் மற்றும் நூலகராக பணியாற்றி வந்த சுப்ரமணியனிடம் இருந்து பேராசிரியர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டு (Re-Designation) உள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட மிகை ஊதியத்தை திரும்பப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் பேராசிரியர் மற்றும் நூலகராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன். 1.12.2004ம் தேதி நூலகர் பணியில் சேர்ந்தார். நூலகர் பதவிக்கு ரூ.8000-275-13500 என்ற விகிதப்படி ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு ரூ.16500-450-22400 என்ற விகிதப்படி அதாவது பேராசிரியர் பதவிக்குரிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.     அந்த வகையில் மட்டும் அவருக்கு இதுவரை ரூ.18.72 லட்சம் மிகை ஊதியமாக வழங்கப்பட்டு இருப்பது, 2015-2016ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பல்கலை சட்டவிதிகளில்,...
முதல்வர் தொகுதியில் ‘முதல்வரின்’  கோல்மால்!

முதல்வர் தொகுதியில் ‘முதல்வரின்’ கோல்மால்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், இல்லாத பாடப்பிரிவுக்கு பாடம் நடத்தியதாக முன்அனுபவச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட கல்லூரியின் முதல்வரே இவ்வாறு தவறான தகவல்களை தந்துள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது. சேலம் பெரியார் பல்கலை, கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்கலை தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதிலும், இணைவு கல்லூரிகளில் புதிய துறைகள் தொடங்கப்படுவதிலும் ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே உள்ளன. இப்பல்கலையின் கீழ், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார், நிதியுதவி பெறும் கலைக்கல்லூரிகள் இணைவு பெற்று இயங்கி வருகின்றன. மேட்டூர், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்ப...