
”டிடிவி தினகரன் மக்களின் முதல்வரா?”; ஜெயலலிதா விசுவாசிகள் அப்செட்!
சேலத்திற்கு வந்திருந்த டிடிவி தினகரனை வரவேற்று சாலையெங்கும் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு வரவேற்பு வாசகங்கள் இருந்ததைக் கண்டு தீவிர எம்ஜிஆர் விசுவாசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சேலத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா மற்றும் கட்சிக் கொடியேற்றும் விழாக்களில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் இன்று சேலம் (ஜூலை 7, 2018) வந்திருந்தார். குரங்குசாவடி அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அவர் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அமமுக தலைமைக் கழக செயலாளருமான எஸ்.கே.செல்வம் வசிக்கும் பூலாவரி அருகே உள்ள ஒரு மண்டபத்தில், திருமண விழா நடந்தது.
இதனால் ஹோட்டல் அருகிலும், பிறகு கொண்டலாம்பட்டியில் இருந்து எஸ்.கே. செல்வம் வீடு ...