Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Threatens women

பெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்! ”குழந்தைப்பேறும்  பாதிக்கலாம்”

பெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்! ”குழந்தைப்பேறும் பாதிக்கலாம்”

அலோபதி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
''கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள், அந்த இளம்பெண். வயது 18. திடீரென்று அவளது முகத்தில் அதிகளவில் பருக்கள் தோன்றவே, தோழிகள் கிண்டல் செய்தனர். போதாக்குறைக்கு மெல்லிதாக அரும்பு மீசையும் முளைக்க, தொடர் கேலி, கிண்டலுக்கு ஆளானாள். அந்தப்பெண் ஒரு நாள் என்னைச் சந்தித்தாள். உடல் பருமன், மெல்லிய மீசை, முகத்தில் பருக்கள் இதையெல்லாம் வைத்து அவளுக்கு என்ன பிரச்னை இருக்கும் என்ற யூகத்திற்கு வந்துவிட்டாலும், 'மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா?' என்றும் கேட்டேன். அதற்கு அவள், சில நேரம் இரண்டு மாதங்களுக்கு மேல்கூட மாதவிடாய் தள்ளிப்போகிறது. அப்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது என்றாள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், நான் யூகித்ததுபோலவே அவளுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் இருப்பது தெரியவந்தது. ஆங்கிலத்தில், 'பாலி சிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் (Polycystic ovarian disea