Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: The Central Government has abandoned that it can not be exempted from the examination only

நீட் தேர்வு: தமிழகம் ஏமாற்றம்!

நீட் தேர்வு: தமிழகம் ஏமாற்றம்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என நடுவண் அரசு கைவிரித்து விட்டது. இதனால், நீட் தேர்வு அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை உடனடியாக துவக்கி செப்டம்பர் 4ம்தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‛நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக மாணவர் சேர்க்கை உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (22/8/17) விசாரணைக்கு வந்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் இல்லை. ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்களிக்க முடியாது. தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியது. இதனையடுத்து நீட் தேர்வு அடிப்படையில் இந்த வருடம் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை செப்டம