Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Telugu actor

ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

அரசியல், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மக்களின் மனம் கவர்ந்த தலைவர்களின் அந்தரங்க தகவல்களைத் தெரிந்து கொள்வதில் வெகுசன மக்களுக்கு என்றுமே ஓர் அலாதி தேடல் இருந்து கொண்டே இருக்கும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்ட நிலையில்கூட இன்றைக்கும் அவரைப்பற்றிய ஆச்சர்யப்படத்தக்க செய்திகள் வெளிந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஜெ.ஜெயலலிதா. எப்போதும் பரபரப்பு அரசியலுக்கு பெயர் பெற்றவர். அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக்குறைவால் மறைந்தார். அரசியலிலும் சினிமாவிலும் எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, ''ஜெயலலிதா: மனமும் மாயையும்'' என்ற பெயரில் மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதி இருக்கிறார். அந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூலாசிரியர் வாஸந்தி, ஜெயலலிதாவைப் பற்றி பல ஆண்டுகளாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த நூலை படைத்திருக்கிறார். அரசியல் மற்றும் வ
‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் 'ஸ்பைடர்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேற்று (செப். 27) வெளியாகி இருக்கிறது. இது ஒரு சைக்கோ திரில்லர் வகைமையிலான படம். இந்திய உளவுத்துறையில் ஃபோன் அழைப்புகளை டேப்பிங் செய்யும் பிரிவில் பணியாற்றுகிறார் ஹீரோ சிவா (மகேஷ்பாபு). சட்டத்திட்டங்களை மீறினால்தானே சாதாரண ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும்?. ஸ்பைடர் ஹீரோவும் அப்படித்தான். தனது 'ஸ்பை ஆப்' மூலம், அபாயகரமான சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து, அதாவது ஃபோன் பேச்சை ஒட்டுக்கேட்டு, பிரச்னையில் சிக்கும் முன்பே அவர்களை மீட்கும் வேலைகளில் ஈடுபடுகிறார் மகேஷ்பாபு. இளம்பெண் ஒருவர் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்க, அவரை காப்பாற்றுவதற்காக உடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் ஒருவரை அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். மறுநாள் பெண் ப