Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Syria

அதிகார வெறி கும்பலின் பலிகடா சிரியா!; செத்து மடியும் குழந்தைகள்!!

அதிகார வெறி கும்பலின் பலிகடா சிரியா!; செத்து மடியும் குழந்தைகள்!!

அரசியல், உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
அதிகார வெறி கொண்டு அலையும் நாடுகளின் கையில் சிக்கிய பூமாலையாக கந்தல் கந்தலாகி வருகிறது சிரியா. தொடரும் உள்நாட்டு யுத்தத்தால் கடந்த நான்கு நாள்களில் மட்டும் 150 குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது. நீண்ட காலமாக அந்நாட்டு அரசுக்கும், குர்து இன மக்களுக்கும் இடையே சண்டை இருந்து வருக்கிறது. தவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடைச்சலும் உண்டு. கொத்துக் கொத்தாக செத்து விழும் அப்பாவி மக்கள், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை தூக்கி வரும் காட்சிகள், குண்டு துளைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், ஒதுங்க இடமின்றி தவிக்கும் ஏதுமறியா மக்கள் என தொடர்ந்து இணையங்களில் உலா வரும் துயரமான படங்கள், மனித மனங்களை உலுக்கி எடுத்த வண்ணம்
இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கர்நாடகாவில் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், இந்தியாவில் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கர்நாடகாவில், கடந்த ஆண்டு எழுத்தாளர் கல்புருகி கொல்லப்பட்டார். நேற்று (செப். 5) லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ். இருவருமே இடதுசாரி சித்தாந்தங்களை பேசக்கூடியவர்கள்; எழுதக்கூடியவர்கள். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். கவுரி லங்கேஷின் படுகொலைக்கு காரணமென காவி கும்பல்களின் மீதான சந்தேகம் இயல்பாகவே வலுத்துள்ளது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் (International Federation for Journalists) சில தகவல்களை வெளியிட்டுள்ளது. 140 நாடுகளில் 6 லட்சம் பத்திரிகையாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு, இந்த சம்மேளனம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 122