Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Supreme Court Verdict

பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவின் நீதிபரிபாலனத்தையும், மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தையும் தொடர்ந்து சிதைத்து வரும் பாஜக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து மீறியிருப்பதன் மூலம், தமிழகத்திற்கு பச்சை துரோகத்தை இழைத்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் உறங்கும் எரிமலையாக இருந்த தமிழகம், வெடித்துக் கிளம்பும் எனத் தெரிகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 16.2.2018ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் நடுவண் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்
காவிரி நீர் பங்கீடு:  தமிழகத்திற்கு ஓரவஞ்சனை;  15 டிஎம்சி வெட்டு

காவிரி நீர் பங்கீடு: தமிழகத்திற்கு ஓரவஞ்சனை; 15 டிஎம்சி வெட்டு

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நீர் பங்கீடு வழக்கில், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் ஒதுக்கீட்டு அளவில் இருந்து மேலும் 14.75 டிஎம்சி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு, காவிரியை நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து அதனால் பயனடையும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. முழுமையான வாதப் பிரதிவாதங்கள் எ-டுத்து வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம்.கன்வல்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.