Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: suffering

ஆசிரியர்கள் ‘ஈகோ’வால் பாதிக்கப்படும் கிராமப்புற ஏழை மாணவர்கள்!; அரசு பாராமுகம்!!

ஆசிரியர்கள் ‘ஈகோ’வால் பாதிக்கப்படும் கிராமப்புற ஏழை மாணவர்கள்!; அரசு பாராமுகம்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
கிராமப்புற பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்ற விரும்பாததால், 1200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் ஏழை மாணவர்களின் கல்வி நலனும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆசிரியர் சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' யுத்தத்தால், உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது. கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுணக்கம் காட்டுவது ஒருபுறம், ஆசிரியர்களின் விருப்பமின்மை மற்றொரு புறம் என மாணவர்களின் கல்வி நலன் அடியோடு முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.     எதனால் இந்த சிக்கல்? என்பது குறித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க (டிஎன்பிபிஜிடிஏ) மாநிலத் தலைவர் ப