Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: south west monsoon

கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!

கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்ததால், சேலம் மாவட்டத்தில் பரவலாக நெல் நாற்று நடவும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   பூகோள ரீதியாகவே, தமிழகம் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால், பருவ மழைக்காலங்களில் கூட சராசரியைவிட குறைவாகவே மழைப் பொழிவு இருக்கிறது. புயல், வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் மழை கிடைத்தால்தான் உண்டு என்கிற நிலைதான் கடந்த சில ஆண்டுகளாக நிலவுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக்காலமும், அதன்பிறகான வடகிழக்குப் பருவமழைக்காலமும் விவசாயிகளின் நம்பிக்கையை பொய்யாக்காமல் ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இயல்புக்கு அதிகமாகவே மழைப்பொழிவு இருந்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியதுடன், விவசாயக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழர் த...
சதம் அடித்த மேட்டூர் அணை நீர்மட்டம்!; விவசாயிகள் மகிழ்ச்சி

சதம் அடித்த மேட்டூர் அணை நீர்மட்டம்!; விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 17, 2018) இரவு 100 அடியை எட்டியுள்ளது. விவசாயப் பயன்பாட்டுக்காக வரும் 19ம் தேதி அணை திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியிலும் கடந்த பத்து நாள்¢களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.   பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் காவ...