Sunday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: senior judges

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது. அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற...