Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: selavu paththana

திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள்
தேனினும் இனிய குறள் அமுதத்தை, திரை இசையில் நயம்பட, எல்லோரையும் ஈர்க்கும்படி செய்வதன் நம் இளங்கம்பன் கவியரசர் கண்ணதாசன். 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' என்பது முதுமொழி. அதுபோல், 'ஆடம்பரம், அழிவையே தரும்' என்பது சான்றோர் அனுபவ மொழி.     வெட்டி பந்தா குடும்பத்திற்கு ஆகாது என்பதை நகைச்சுவையுடன், தனக்கே உரிய மேதைமைத் தனத்துடன் 'பாமா விஜயம்' படத்தில் சொல்லி இருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். 24.2.1967ல் வெளியான 'பாமா விஜயம்' படத்தின் ஒரு வரி கதை ரொம்பவே எளிமையானது.     ஊரே கொண்டாடும் திரைப்பட நடிகை பாமா, அவருடைய குடியிருப்பு அருகில் கூட்டுக்குடும்பமாக வாழும் தனது ரசிகர்களின் வீட்டிற்கு ஒரு நாள் விஜயம் செய்கிறாள். அவளுடைய வருகைக்காக, நடுத்தர வரக்கத்தைச் சேர்ந்த அந்த ரசிகர்கள், சக்திக்கு மீறி கடனை உடனை வாங்கி விலை உயர்ந்த சோஃபா, கட்டில் ம