Monday, January 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: seeman

மலேசியாவில் ரஜினி பேச்சு: ட்விட்டரில் கிளம்பும் கடும் எதிர்ப்பு!

மலேசியாவில் ரஜினி பேச்சு: ட்விட்டரில் கிளம்பும் கடும் எதிர்ப்பு!

அரசியல், உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பலர் கேலி செய்து, 'மீம்'களை பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் இதற்குமுன் திரைத்துறையில் இருந்து எத்தனையோ நடிகர்கள், கலைஞர்கள் அரசியலுக்கு வந்திருந்த போதும் ரஜினி அளவுக்கு யாரும் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததில்லை. ஆனால், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி சொன்னாலும் சொன்னார், அவருக்கு பல்வேறு முனைகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல் வருகை குறித்து பேசிய அடுத்த நாளே ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களை புதுப்பிக்க வசதியாக 'ரஜினி மன்றம்' என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கியது, ராமகிருஷ்ண மடாதிபதியிடம் ஆசி, திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு, 'ரஜினி மன்றம்' என்பதை மாற்றி ...
ரஜினியின் புதிய அரசியல் கட்சி ஜனவரி 14ல் அறிவிப்பு?

ரஜினியின் புதிய அரசியல் கட்சி ஜனவரி 14ல் அறிவிப்பு?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''அரசியலுக்கு வருவது உறுதி'' என்றதன் மூலம் இப்போதைக்கு தமிழக அரசியல் களத்தில் பரபர ஆக்ஷன் திரில்லர் நாயகனாக உருவெடுத்துள்ளார் ரஜினிகாந்த். ''ஆன்மிகம் தெரியும்; அரசியலும் தெரியும்; அதென்ன ஆன்மிக அரசியல்?. இரண்டும் எதிரெதிர் திசையில் பயணிக்கக் கூடியதாச்சே!" என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது ரஜினியின் புதிய சூத்திரம். எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, அவரிடம் கொள்கைகள் என்ன என்று கேட்டதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். அதுதான், அண்ணாயிஸம். அதற்கே, கொந்தளிக்காதவர்கள் இப்போது ஆன்மிக அரசியலுக்காக தொண்டை வறல கூச்சல் போடுவானேன்?. பிறப்பால் ரஜினிகாந்த் தமிழர் அல்லர் என்று உரத்துச் சொல்பவர்களில் நாம் தமிழர் சீமானும், பாமகவின் அன்புமணி ராமதாஸூம் முக்கியமானவர்கள். இன அரசியலை மையமாக வைத்து களமாடி வரும் இருவருமே, ரஜினி வருகையால் அரசியலில் தங்கள் சுவடுகளே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்...
மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் மெர்சல் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உள்பட ஏழெட்டு திரைப்படங்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மலையாளம், வங்கமொழிப் படங்களைப்போல தமிழ் படங்களில் கதையின் அடர்த்தி வலுவாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரொம்ப காலமாகவே சொல்லப்படுவது உண்டு. அண்மைக்காலமாக தெலுங்கில் கூட நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழில் இன்னும் அத்தகைய போக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால், பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாக முன்னெடுக்கப்படாமலும் இல்லை. இளம் இயக்குநர்களின் 'ஆரண்ய காண்டம்', 'அழகர்சாமியின் குதிரை', 'காக்காமுட்டை', 'குற்றமே தண்டனை', 'குற்றம் கடிதல்', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்குபொம்மை' போன்ற வித்தியாசமான முயற்சிகள் பரவலாக கவனம் பெற்றன. இந்தப்படங்களில் சில, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. ...