துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!
நாடு முழுவதும் உள்ள இந்திய பல்கலைக்கழகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 496 துணைவேந்தர்களில் 48 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சமூகநீதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதில் அய்யம் எழுந்துள்ளது.
இந்தியா போன்ற பன்முகக் கலாச்சாரம் நிலவும் நாடுகளில் இடஒதுக்கீடு சட்டம் இல்லாவிட்டால், பல இனங்களே எழுத்தறிவின்றி போய்விடும். அந்த சாபம், தலைமுறை தலைமுறையாக தொடரவும் கூடும். இதை உணர்ந்ததால்தான் திராவிட இயக்கங்கள், சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. வருகின்றன.
ஆனால், பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'கிரீமி லேயர்' குறித்து அடிக்கடி பொது விவாதத்திற்கு வருவதை அறியலாம். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்பொடிகள் கூட்டமோ, இட ஒதுக்கீடு என்பதை பிச்சை இடுவது அல்லது பிச்சை பெறுவதற்குச் சமம் என்பதுபோல் பேசுகின்றனர். என்னளவில் இட ஒதுக்க...