சவரக்கத்தி – சினிமா விமர்சனம்; ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்!’
படங்களில் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை கையாளும் மிஷ்கின் மற்றும் ராம் என்ற இரு இயக்குநர்களின் நடிப்பில் காமெடி, குடும்பம், சென்டிமென்ட், காதல் என ரசனையான கலவையில் இன்று (பிப்ரவரி 9, 2018) வெளியாகி இருக்கிறது, 'சவரக்கத்தி'.
நடிப்பு: ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர்
இசை: அரோல் குரேலி
ஒளிப்பதிவு: கார்த்திக்
தயாரிப்பு: லோன்லி உல்ஃப் புரடக்ஷன்ஸ்
இயக்குநர்: ஜி.ஆர். ஆதித்யா
கதை என்ன?:
கத்தி என்றாலே அது உயிரைக்கொல்லும் ஆயுதம் என்பதாகவே மனிதர்களின் பொதுப்புத்தியில் உறைந்து கிடைக்கிறது. ஆனால், அதே கத்திதான் உயிரை பிரசவிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. பொருள் ஒன்று; நோக்கம் வேறானது என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.
திரைமொழி:
கொடூரமான ரவுடியான மங்கா (மிஷ்கின்), சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறார். பரோல் விடுப்பு முடிந்து, மாலை 6 மணிக்குள் மீண்டும...