Thursday, January 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: sanga ilakkiyam

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், தகவல், முக்கிய செய்திகள்
எத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்... எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல்.   அதனால்தான் மகாகவி பாரதி, 'ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே' என அறைகூவல் விடுத்தான். காதலினால் கலவி உண்டாம்; காதலினால் கவலைகள் போம்' என்றான். உள்ளத்தால் கூடிய காதலின் உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான், உடல் தீண்டல்.   உள்ளத்தால் இணைந்த பிறகு, உடல்தீண்டல் நிகழ்கிறது. அங்கே, ஈருடல் ஓருயிராகிறது. தலைவனும், தலைவியும் கட்டி அணைத்துக் கொண்டால் அங்கே காற்றுகூட இடையறுத்துச் செல்லக்கூடாதாம். அந்தளவு...