Sunday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: roasting media

த்தூ…! ஊடகங்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

த்தூ…! ஊடகங்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 23) செய்தி தொலைக்காட்சிகளை பார்த்தவர்களுக்கு நிரம்பவவே ஆயாச உணர்வை ஏற்படுத்தி இருக்கும். 'இந்த சினிமாகாரனுங்கதான் பொறந்தானுங்களா இந்தியாவுல? நாம்மலாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா...?' என்று கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, சினிமா நடிகர்களைப் பற்றி, அவர் பாணியில் கிண்டலடித்து இருப்பார். ஜூன் 23 அன்று நடிகர் சங்க தேர்தல் செய்திகளை, 'காலை அரும்பி பகலெல்லாம் போதாகி' கணக்காக நேரலை செய்து, மக்களின் கோபத்திற்கு கிட்டத்தட்ட எல்லா தமிழ் செய்தி தொலைக்காட்சிகளுமே ஆளாகி இருந்தன. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரம், தவித்த வாய்க்கு ஒரு மிடறு தண்ணீர்கூட தர இயலாத நிலையில் இருப்பதுதான், நிகழ்காலத் துயரம். கையில் குடங்களுடன் குழாயடிகளில் மைல் நீள வரிசையில் கொதிக்கும் வெயிலில் காத்திருக்கும் தமிழக தாய்மார்கள் ஒருபுறம்; அதேநேரம், டாஸ்மாக் கடைகளில் க...