Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Resistance

எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு கடுமையாக வலுத்துள்ள நிலையில், இன்று (ஜூலை 23, 2018) மேம்பாலம் கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்ய வந்த ஊழியர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை கைது செய்து விடுவோம் என்று காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 186 ஹெக்டேர் நிலங்கள், தனியார் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் ஆகும்.     சேலம் மாவட்டம் ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, குப்பனூர், நிலவாரப்பட்டி, சித்தனேரி, பாரப்பட்டி, பூலாவாரி அக்ரஹாரம் உள்ளிட்ட 20 கிராமங்களின் வழியாக எட்டு வழிச்சாலை செல்கிறது. விவசாய நிலத்தை அழித்துப் போடப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதியை (24) காவல்துறையினர் இன்று (ஜூன் 19, 2018) கைது செய்தனர். சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எட்டு வழிச்சாலையாக இந்த வழித்தடம் அமைகிறது. இதற்காக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இத்திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எக்காரணத்திற்காகவும் ஒரு பிடி விளை நிலத்தைக்கூட விட்டுத்தர முடியாது என பல இடங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், எட்டு