Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: reduction

177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு;  தவறை உணர்ந்த பாஜக!

177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு; தவறை உணர்ந்த பாஜக!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய அரசு 177 பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை இன்று (நவம்பர் 10, 2017) அதிரடியாக குறைத்துள்ளது. இதன்மூலம், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய தவறுகளை பாஜக ஒப்புக்கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே இந்தியா ஒரே வரி என்ற பாஜகவின் கொள்கையாக இந்த புதிய வரி சீர்திருத்தம் கருதப்படுகிறது. இதன்படி 0, 5, 12, 18, 28 என ஐந்து படிநிலைகளில் ஜிஎஸ்டி வரிகள் நிர்ணயிக்கப்பட்டன. அத்தியாவசியமான பொருள்களில் பலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், முக்கியமான பல பொருள்களுக்கும், சேவைகளுக்கும் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டு இருப்பதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போன்றோர், மாநிலங்களில் மதிப்புக்கூடுதல் வரிகள் அமலில் இருக்கும்போது
முதல்வர் மருத்துவக்குழு டாக்டர்கள் குறைப்பு:  ஓரவஞ்சனை  ஏன்?

முதல்வர் மருத்துவக்குழு டாக்டர்கள் குறைப்பு: ஓரவஞ்சனை ஏன்?

கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முதல்வருடன் பின்தொடர்ந்து செல்லும் மருத்துவக்குழுவின் பலம் திடீரென்று குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் போன்ற முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போது, அவர்களுக்கு 'ஹை செக்யூரிட்டி' போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். தவிர, அந்தந்த மாவட்டக் காவல்துறையினரும் பாதுகாப்புக்குச் செல்வது நடைமுறை. போலீஸ் பந்தோபஸ்து தவிர, விஐபிக்களை பின்தொடர்ந்து மருத்துவக்குழுவினர்களுடன் கூடிய ஓர் ஆம்புலன்ஸ் வாகனமும் செல்லும். அந்த வாகனத்தில் அவசர சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டு இருக்கும். பொதுவாக, இருதயவியல் மருத்துவர், பொது மருத்துவர், சிறுநீரகவியல் மருத்துவர், எலும்புமுறிவு மருத்துவர் மற்றும் இவர்களுடன் ஒரு மயக்கவியல் மருத்துவரும் உடன் செல்வர். இவ