Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Ram

சவரக்கத்தி – சினிமா விமர்சனம்;  ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்!’

சவரக்கத்தி – சினிமா விமர்சனம்; ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
படங்களில் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை கையாளும் மிஷ்கின் மற்றும் ராம் என்ற இரு இயக்குநர்களின் நடிப்பில் காமெடி, குடும்பம், சென்டிமென்ட், காதல் என ரசனையான கலவையில் இன்று (பிப்ரவரி 9, 2018) வெளியாகி இருக்கிறது, 'சவரக்கத்தி'. நடிப்பு: ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் இசை: அரோல் குரேலி ஒளிப்பதிவு: கார்த்திக் தயாரிப்பு: லோன்லி உல்ஃப் புரடக்ஷன்ஸ் இயக்குநர்: ஜி.ஆர். ஆதித்யா கதை என்ன?: கத்தி என்றாலே அது உயிரைக்கொல்லும் ஆயுதம் என்பதாகவே மனிதர்களின் பொதுப்புத்தியில் உறைந்து கிடைக்கிறது. ஆனால், அதே கத்திதான் உயிரை பிரசவிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. பொருள் ஒன்று; நோக்கம் வேறானது என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை. திரைமொழி: கொடூரமான ரவுடியான மங்கா (மிஷ்கின்), சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறார். பரோல் விடுப்பு முடிந்து, மாலை 6 மணிக்குள் மீண
தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப். 22ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதைத்தொடர்ந்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக உடைந்தது. தமிழக ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் ஆட்சியும் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வ