Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Ragadevan Ilayaraja

”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ரசிகன் பக்கம்)     இளையராஜா...   இந்த ஒற்றைப்பெயர் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்குமுள்ள திரையிசை ரசிகனை மீள் உருவாக்கம் செய்த மந்திரம் என்றால் மிகையாகாது. உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முதலில் கதாநாயக பிம்பத்தை உடைத்து, 'இசையமைப்பாளர் இளையராஜா' என்றாலே படம் பார்க்க போகலாம் என்ற நிலையை உருவாக்கிய பெருமை, ராகதேவனையே சேரும்.   மாட்டு வண்டி போகாத பாதையில் எல்லாம்கூட ராஜாவின் பாட்டு வண்டி போய்ச்சேர்ந்தது நிகழ்கால நிதர்சனம். 'வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா... வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா...' என்று அவருக்கு முன்பு இருந்த இசை ஜாம்பவான்களையும், அவருக்குப் பின்னால் வந்த இசைக்கலைஞர்களையும் 'ஓரம்போ... ஓரம்போ...' என்று ஓரங்கட்டிவிட்டு, உச்சாணிக்கொம்பில் வீற்றிருக்கும் ஒரே இசைக்கலைஞன் இளையராஜா.   அவருக்கு தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலகெங்கும் ரசிக பட்டாளங்கள் இ