Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: prison sentence

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதல் குற்றவாளியான யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவர், இறுதிமூச்சு உள்ள வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ரா - வெங்கடாசலம் தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல், ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுவிட்டது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால், அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்த...