Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: politician

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த 2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் பழ.கருப்பையா (76). அவருடைய மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அக்கட்சியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார் பழ.கருப்பையா. பழ.கருப்பையா, ஒரு கட்சியில் இருந்து கொண்டே எப்போது அந்தக் கட்சியையே எதிர்மறையாக விமர்சிக்கிறாரோ அதையடுத்து அவர் அக்கட்சியைவிட்டு விலகி வேறு கட்சியில் சேரப்போகிறார் என்பது அவருடைய கடந்த கால அரசியல் செயல்பாடுகளை உற்றுக் காண்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.   இந்திய தேசிய காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, மதிமுக மீண்டும் காங்கிரஸ், பின்னர் அதிமுக, திமுக என கடந்த 50 ஆண்டுகளில் அவர் போகாத அரசியல் கட்சிகள் இல்லை. நாளையே அவர் மீண்டும் திமுகவில் இணைந்தாலும், சேர்த்துக் கொள்ள அக்கட்சியும் மறுக்காது. ஆனாலும், தரம
வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே  கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை விட நம்ம ஊர் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சும், அசட்டுத்தனமான நடவடிக்கைகளும் நம்மை நகைச்சுவையால் திணறடிக்கின்றன என்றால் மிகையாகாது. நடிகர் விஜய் நடித்த 'காவலன்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு, ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லிவிட்டு 'பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு' என அப்பாவியாகக் கூறுவார். அதேபோல்தான் அமைந்திருக்கிறது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் உள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொசுக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வையுங்கள்'' என்று சொன்னதாகக் கூறினார். https://twitter.com/twi