Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: political affair

ரஜினி அரசியல் விவகாரம்: ட்விட்டரில் கிழித்து தோரணம் விடும் நெட்டிசன்கள்!

ரஜினி அரசியல் விவகாரம்: ட்விட்டரில் கிழித்து தோரணம் விடும் நெட்டிசன்கள்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''அரசியல் களத்தில் இறங்குவதற்கு இப்போது அவசரம் இல்லை,'' என்று ரஜினிகாந்த் திடீரென்று கூறியுள்ளதை கிண்டலடித்து நெட்டிஸன்கள் ட்விட்டரில் கேலி, கிண்டல் செய்து விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். கடந்த மே மாதம், தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை நடத்தினார் ரஜினிகாந்த். அப்போது பேசிய அவர், ''போர் வரட்டும். அப்போது பார்த்துக்கலாம். அதுவரை காத்திருங்கள்'' என்ற குறியீட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அரசியல் நெருப்பை பற்ற வைத்தார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட ரஜினிகாந்த், அரசியல் களம் காண்பது உறுதியாகி விட்டதாகவே அவருடைய ரசிகர்கள் கருதினர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி, இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்புகளும் நிலவி வந்தது. அண்மையில் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் சென்ற ரஜினிகாந்த், அங்கு சாமி தரிசனம் செய்தார். ராகவேந்திரர் தரிசனம் முடிந