சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை இரண்டாம் முறையாக கைப்பற்றியது பாமக!
சேலம் மாவட்ட
ஊராட்சிக்குழுத் தலைவர்
பதவியை பாமக இரண்டாவது
முறையாக கைப்பற்றியது.
அக்கட்சியின் வேட்பாளர் ரேவதி,
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுகவின் ராஜேந்திரன்,
துணைத்தலைவராக
வெற்றி பெற்றார்.
ஊரக உள்ளாட்சி
அமைப்புகளுக்கு இரண்டு
கட்டங்களாக தேர்தல் நடத்தி
முடிக்கப்பட்டது. ஊராட்சி
ஒன்றியக்குழு, மாவட்ட
ஊராட்சிக்குழுக்களின் தலைவர்,
துணைத்தலைவர் பதவிகளுக்கான
மறைமுக தேர்தல் ஜனவரி
11ம் தேதி (சனிக்கிழமை) நடந்தது.
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவில்
மொத்தம் 29 உறுப்பினர் பதவிகள்
உள்ளன. இதில், அதிமுக
18 இடங்களிலும், அதன்
கூட்டணிக் கட்சியான பாமக 4,
தேமுதிக 1 இடங்களிலும்
வெற்றி பெற்றிருந்தன.
எஞ்சியுள்ள 6 இடங்களையும்
திமுக கைப்பற்றி இருந்தது.
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்
பதவிக்கு போதிய பெரும்பான்மையை
அதிமுக தனித்தே பெற்றிருக்கிறது.
என்றாலும், ஒன்றிய...