ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ்! உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்!!
சேலத்தில் ரவுடி கதிர்வேலை
திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு,
என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர்
நாடகம் ஆடுவதாக உண்மை
கண்டறியும் குழுவினர்
தெரிவித்துள்ளனர்.
சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல், கடந்த மே 2, 2019ம் தேதியன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது. ஒரு கொலை வழக்கில், காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அவரை பிடிக்க முயன்றபோது, கத்தியால் தாக்க முயன்றதாகவும், அதனால் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவும் சொன்னது காவல்துறை.
கதிர்வேல் மீது ஏற்கனவே மூன்று கொலை, ஒன்பது வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது ஒருபுறம் இருக்க, அவர் தானாகவே காவல்துறையில் சரணடைந்த நிலையில், திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் மாறுபட்ட...