பூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா?
ஒரு பெண், தனது முதல் மாதவிடாயை அடைவதில் என்ன பெரிய விஷயம் இருந்துவிடப் போகிறது? தமிழ் கலாச்சாரத்தில் அது மிகப் பெரிய விசேஷமாக பார்க்கப்படுவதோடு, அதைத்தொடர்ந்து ஒரு பெரிய விழாவும் நடத்தப்படுகிறது.
என் மூத்த சகோதரிக்கான நிகழ்ச்சியை நடத்த, குடும்பத்தினர் தயாராகியபோது, எதற்காக என்றே எனக்கு புரியவில்லை. ஆர்வம் மிகுதியால், இந்த சம்பிரதாயத்தின் முக்கியத்துவம் குறித்து என் குடும்பத்தினரிடம் கேட்டேன்.
என் சகோதரி `பெரியவள்` ஆகியுள்ளதால் இந்த நிகழ்ச்சி நடப்பதாக அவர்கள் கூறியதும், அந்த அறியாத வயதில் எல்லா ஆண் குழந்தையும் கேட்கும் கேள்வியைத்தான் நானும் கேட்டேன்.
"நான் `பெரிய பையன்` ஆகியதற்கான நிகழ்ச்சி எப்போது?" என்று நான் கேட்டேன்.
என் குடும்பத்தினர் அன்று எதற்காக அவ்வளவு நேரம் சிரித்தார்கள், வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும், அந்த கதையை ஏன் தொடர்ந்து கூறிக்கொண்டு இரு...