இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்! ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”
"இந்த சமுதாயம்தான் நமக்கு எல்லாமே கொடுத்தது; கொடுத்து வருகிறது. நாமும் அதற்குரிய நன்றிக்கடனைச் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம். அதற்காகவே, இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சொந்த செலவில் நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறோம்," என்று தீர்க்கமாக பேசுகிறார் மோகன்ராஜா.
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜா (37). இயற்கை மீதான நேசத்தின் வெளிப்பாடாக, 'காமதேனு' விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் நல்வாழ்வு அறக்கட்டளை'யை நிறுவி, பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களை ஊக்குவிக்க, நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.
அவருடனான உரையாடலில் இருந்து...
"நாட்டுப் பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த அழுத்தம், நீரிழிவு, வாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் நம்மை அண்டாமல் தடுக்க, இயற்கை நமக்கு அளித்த கொடைதான் நாட்டு மாட்டினங்களும் அவை தரும...