அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிரடிகளால் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலின் ராஜ்ஜியம் கூண்டோடு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்று தொடங்கிய 'பிரேக்கிங் நியூஸ்' ஜுரம், இன்னும் தமிழக மின்னணு ஊடகங்களை விட்டு அகலவே இல்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல்கள் குறித்த செய்திகள்தான் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஆக்கிரமித்து உள்ளன.
நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என உச்சாணிக் கொம்பிலேயே ஜெயலலிதாவை வைத்து அழகு பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள்தான், அவர் மறைந்த பின்னர் சசிகலாவை 'சின்னம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தனர். அதிமுகவை காக்கும் ஒரே ரட்சகர் அவர்தான் என்று, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் இன்றைய முதல்வர், துணை முதல்வர் உள்¢ளிட்ட விசுவாசிகள்தான்.
'இடத்தைக் கொடுத்தா...