Friday, October 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Periyar University

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலையில் நேற்று நடந்த ஜம்போ இடமாறுதல் உத்தரவின் பின்னணியிலும் குறிப்பிட்ட சங்கத்தினரை ஒடுக்கும் நோக்கில் உத்தரவிடப்பட்டு உள்ளதோடு, முக்கிய கோப்புகள் மாயமான விவகாரத்தை அடியோடு முடக்கிப்போடும் உள்நோக்கம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. சேலம் பெரியார் பல்கலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 376 ஊழியர்கள் தொகுப்பூதியம் / தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள் தவிர 62 நிரந்தர பணியாளர்களும் உள்ளனர்.   நிர்வாகம் தொய்வடையாமல் இருக்க முதுகெலும்பு போன்றவர்கள்தான் இத்தகைய அமைச்சுப்பணியாளர்கள். ஆனால் அரசு விதிகள் அல்லது பல்கலை விதிகளின்படி ஓர் ஊழியர், ஒரே பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது. நீண்ட காலமாக ஒருவர் ஒரே பிரிவில் பணியாற்றும்போது அங்கே முறைகேடுகள் அரங்கேற வாய...
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதோடு, நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபட்டு வருவதாக பெரியார் பல்கலை மீது அதிருப்தி கிளம்பியுள்ளது.   நீதிமன்றம், காவல்துறை உத்தரவுகள் எல்லாம் எப்போதுமே விளிம்புநிலை மக்களை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அதிகார பலம், பொருளாதார பலம் கொண்டவர்கள் பெரும்பாலும் எவ்வித சட்டவிதிகளையும் முறையாக பின்பற்றுவதில்லை. அதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் விதிவிலக்கு அல்ல. பெரியார் பல்கலையில் பொருளாதாரத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வைத்தியநாதன். பத்திரிகைளுக்கு பல்கலையைப் பற்றி தவறாக செய்திகள் கொடுத்ததாக அவரிடம் விளக்கம் கேட்டு, அப்போதிருந்த துணைவேந்தர் சுவாமிநாதன் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார். இந்தப் புகாரின்பேரில், அவர் ஏப்ரல் 4, 2017ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.   இச்சம்பவத்திற்குப்...
பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பணி நியமனங்களில் ஊழல், முன்னாள் பதிவாளர் தற்கொலை மர்மம், தணிக்கையில் முறைகேடு என தொடர் சர்ச்சைகளின் வளையத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பெரியார் பல்கலைக்கழகம், இப்போது பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு வழங்கியதிலும் உள்நோக்கம் இருப்பதாக பல்கலை வட்டாரத்தில் புகைய ஆரம்பித்திருக்கிறது.   சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் மணிவண்ணன், 17.8.2018ம் தேதியுடன் பணி நிறைவு பெற்றார். அவருக்கு கடந்த 18ம் தேதி பல்கலை பேராசிரியர்கள் பாராட்டு விழா நடத்தி, வழியனுப்பி வைத்தனர். இதையொட்டி, ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே புதிதாக பதிவாளர் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள தேர்வாணையர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதுவரை முக்கிய பதவியான பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தால் பல்கலையில் நிர்வாகப்பணிகள் பாதிக்கப்பட...
பெரியார் பல்கலையில் என்னதான் நடக்கிறது? இன்றாவது மனம் திறப்பாரா பதிவாளர்?

பெரியார் பல்கலையில் என்னதான் நடக்கிறது? இன்றாவது மனம் திறப்பாரா பதிவாளர்?

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே சுற்றிச்சுழன்றடித்து வரும் ஊழல் புகார்கள் குறித்து பணி நிறைவு பெறும் நாளான இன்றாவது (ஆகஸ்ட் 17, 2018) பதிவாளர் மணிவண்ணன் மனம் திறப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பல்கலை வட்டாரத்தில் ஏகத்துக்கும் பரவிக்கிடக்கிறது. சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் மணிவண்ணன். இவருடைய தாய்ப்பல்கலையான தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் இணை பேராசிரியராகவும், பின்னர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலையில் தேர்வாணையராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்ற மணிவண்ணன், கடந்த 18.8.2015ம் தேதி பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியில் சேர்ந்தார்.   மூன்றாண்டு காலம் 'டென்யூர்' முடிந்து இன்றுடன் அவர் பணி நிறைவு பெறுகிறார். பதிவாளர் பதவி என்பது, துணை வேந்தருக்கு அடுத்த நிலையில் நிர்வாக ரீதியில் அதிகாரமிக்கது ஆகும். ஆசிரியர் மற்றும் ஆச...
போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
-சிறப்பு செய்தி-   சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.   பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.   தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.   அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப...
பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் புதிதாக தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான நியமன வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த முறையாவது வெளிப்படைத்தன்மையுடன் இப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பேராசிரியர்கள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.   சேலம் பெரியார் பல்கலைக்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் அத்தனை நெருங்கிய தொடர்போ என்னவோ.... நிர்வாகம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையிலும் வில்லங்கமும் சேர்ந்தே இணைந்து கொள்கிறது. அண்மைக்காலமாக ஊழலுடன் சாதிய பற்றும் சேர்ந்து கொண்டுள்ளது.   தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான அறிவிப்புதான் லேட்டஸ்ட் வில்லங்கம். இந்தப் பல்கலையில் தேர்வாணையராக பணியாற்றி வந்த பேராசிரியர் லீலா, 2018, பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்றார். அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் முன்பே அதாவது கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே, புதிய தேர்வாணையரை...
பெரியார் பல்கலை பேராசிரியர் பதவி இறக்கம்!; சிண்டிகேட் ஒப்புதல்

பெரியார் பல்கலை பேராசிரியர் பதவி இறக்கம்!; சிண்டிகேட் ஒப்புதல்

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலையில் பேராசிரியர் மற்றும் நூலகராக பணியாற்றி வந்த சுப்ரமணியனிடம் இருந்து பேராசிரியர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டு (Re-Designation) உள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட மிகை ஊதியத்தை திரும்பப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் பேராசிரியர் மற்றும் நூலகராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன். 1.12.2004ம் தேதி நூலகர் பணியில் சேர்ந்தார். நூலகர் பதவிக்கு ரூ.8000-275-13500 என்ற விகிதப்படி ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு ரூ.16500-450-22400 என்ற விகிதப்படி அதாவது பேராசிரியர் பதவிக்குரிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.     அந்த வகையில் மட்டும் அவருக்கு இதுவரை ரூ.18.72 லட்சம் மிகை ஊதியமாக வழங்கப்பட்டு இருப்பது, 2015-2016ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பல்கலை சட்டவிதிகளில்,...
ஆசிரியர் நியமன ஊழல் கோப்புகள் மாயமானதா இல்லையா? பெரியார் பல்கலை மழுப்பல்!

ஆசிரியர் நியமன ஊழல் கோப்புகள் மாயமானதா இல்லையா? பெரியார் பல்கலை மழுப்பல்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காத்திரமான புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய கோப்புகள் விவகாரத்தில் மழுப்பலான பதிலைச் சொல்லி செனட் கூட்டத்தை ஒப்பேற்றியுள்ளது பல்கலை நிர்வாகம்.   சேலம் பெரியார் பல்கலையில் கடந்த 20ம் தேதி ஆட்சிப்பேரவைக்குழு எனப்படும் செனட் கூட்டம் நடந்தது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டிய இக்கூட்டம், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடந்து முடிந்துள்ளது. பல்கலை செனட் அரங்கில் காலை 11 மணிக்கு துவங்கிய இக்கூட்டம், மதியம் 1.30 மணிக்கு முடிந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசுக்கல்லூரி, உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட செனட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.   ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடக்கும் கூட்டம் எ...
மேட்டூர் அணை நிரம்பியதால் சேலத்தில் நிலநடுக்கமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

மேட்டூர் அணை நிரம்பியதால் சேலத்தில் நிலநடுக்கமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா, உலகம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 22, 2018) காலை நில நடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு மேட்டூர் அணையில் நீர் நிரம்பியதுதான் நில அதிர்வுக்குக் காரணம் என்ற தகவலால் மேலும் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இன்று காலை 7.45 மணியில் இருந்து 7.50 மணிக்குள் பரவலாக லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, சித்தனூர் என மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்கள் மட்டுமின்றி, மாநகர பகுதிகளில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.   வீடுகளில் திடீரென்று பாத்திரங்கள்¢ உருண்டு கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பலர், பாதுகாப்பு கருதி வீதிகளுக்கு ஓடிவந்தனர். இன்று காலை பொதுமக்கள் தெருக்களில் கூடி இதைப்பற்றியே ஆச்சர்யமும் பீதியும் க...