Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Perarivalan

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

அரசியல், இந்தியா, காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ...
நேற்று  செங்கொடி;  இன்று அனிதா!

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

அரசியல், இந்தியா, கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''பொறுத்தது போதும்...புறப்படு தமிழா...'' மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா. அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான். ''அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? 'விமான ஓட்டி' கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,'' என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய ப...