Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: people have confidence in astrology

சேலத்தின் ஜோதிட கிராமம்…!

சேலத்தின் ஜோதிட கிராமம்…!

சேலம், முக்கிய செய்திகள், ராசிபலன்
''குலத்தொழிலை மறக்காத இளம் தலைமுறையினர்'' சேலத்திற்கென்று இருக்கும் சில தனித்த அடையாளங்களில், வீராணம் கிராமத்திற்கும் இடம் உண்டு. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது வீராணம். இந்த ஊரில், சுமார் 25 குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஒரே பொருளை விற்கும் கடைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருந்தாலே தொழில் போட்டி வந்து விடும் அல்லது வியாபாரம் படுத்து விடும். ஆனால் இங்குள்ள ஜோதிடர்களுக்கு அப்படி அல்ல. வீராணத்தில் அடுத்தடுத்து 'ஜோதிட நிலையம்' பெயர் பலகை இருப்பதைக் காண முடியும். வள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறை களாக ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஒரே குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு வசிக்கின்றனர்.  சமீப காலங்களாக வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலரும் இப்பகுதிய...