Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: people agitation

பெயரளவுக்கு நடந்த எட்டுவழிச்சாலை விசாரணை!; மக்கள் எதிர்ப்பு முழக்கம்; அதிகாரிகள் டென்ஷன்!!

பெயரளவுக்கு நடந்த எட்டுவழிச்சாலை விசாரணை!; மக்கள் எதிர்ப்பு முழக்கம்; அதிகாரிகள் டென்ஷன்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக, சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து ஏற்கனவே ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான சட்டப்பூர்வமான விசாரணை இன்று (ஜூலை 6, 2018) சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலரும், நில எடுப்புக்கான அதிகாரம் பெற்ற அலுவலருமான சுகுமார், நில உரிமையாளர்களிடம் நேரில் கருத்துகளைக் கேட்டறிந்தார். வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்¢ளி, சின்னக்கவுண்டாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மொத்தம் 169 பட்டாதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.   விசாரணைக்கு வந்தவர்களிடம் எட்டு வழிச்சாலையால் எத்தனை ஏக்கர் நிலம் பறிபோகிறது?, குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள்? நிலம் கூட்டுப்பட்டாவாக இருக்கிறதா? தனித்தனியாக கிரயம் செய்யப்பட்டுள்ளதா? மகன், மகள்கள் இருந்த...