நயன்தாரா அழகில் மயங்கிய திருடன்; நூதனமாக பிடித்த பீஹார் பெண் போலீஸ்!
நயன்தாரா அழகில் மயங்கிய மொபைல் ஃபோன் திருடனை நூதனமாக கைது செய்த பெண் காவல்துறை அதிகாரிக்கு, பீஹார் காவல்துறையில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
பீஹார் மாநிலத்தில் இன்றைய தினம் இரண்டு செய்திகள் பரபரப்புக்கு உள்ளானவை. ஒன்று, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மீண்டும் சிறைவாசம்.
இன்னொரு பரபரப்பு, காவல்துறையில் இருந்து...
பரபரப்புக்குக் காரணமானவர், மதுபாலா தேவி. பீஹார் தர்பங்கா நகர காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளர். சாதனையாளர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை; ஏற்கனவே இருக்கும் ஒன்றை புதிய கோணத்தில் செயல்படுத்துவதாக ஒரு கூற்று உண்டு.
ஒரு வழக்கில் மதுபாலா தேவி கையாண்ட ஓர் உத்தி, இன்றைக்கு பீஹார் முழுவதும் அவரை 'டாக் ஆப் த டவுன்' ஆக ஆக்கியிருக்கிறது.
பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் இருக்கிறது தர்பங்கா மாவட்டம். அந்தப்...