சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆளுங்கட்சியே தலைவர் பதவியை கைப்பற்றியது!
தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜன. 11) மறைமுகத் தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும், கொளத்தூர் ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட ஒன்றியங்கள் தவிர, மற்ற ஒன்றியங்களில் அனைத்திலும் தலைவர் பதவியை ஆளுங்கட்சியே கைப்பற்றியது. சில இடங்களில் பாமகவுக்கும், ஒரே ஒரு ஒன்றியத்தில் தேமுதிகவுக்கும் துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது, ஆளுங்கட்சி. மூன்று ஒன்றியங்களில், துணைத்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக தலைவர் துணைத்தலைவர் பதவிகளைக் கைப்பற்றியவர்கள் விவரம்:
1. ஆத்தூர் ஒன்றியம்:
தலைவர்: லிங்கம்மாள் (அதிமுக)
துணைத்தலைவர்: கன்ன...