”ஒருநாள் என்கூட இருக்கணும்!” தொண்டரின் மனைவிக்கு வலைவிரித்த சேலம் அதிமுக பிரமுகர்!
சேலம் அருகே,
அதிமுக தொண்டர் ஒருவரின்
மனைவியை அக்கட்சி பிரமுகரே
பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்ற சம்பவம் கட்சிக்குள்
மட்டுமின்றி உள்ளூரிலும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மல்லூர்
அருகே உள்ள ஏர்வாடியைச்
சேர்ந்தவர் ஜெகநாதன்.
அதிமுகவில் பனமரத்துப்பட்டி
ஒன்றிய செயலாளராகவும்,
பனமரத்துப்பட்டி ஊராட்சி
ஒன்றியக்குழுத் தலைவராகவும்
இருக்கிறார். இவருடைய
மனைவி அமுதா.
ஏர்வாடி ஊராட்சி மன்றத்
தலைவராக உள்ளார்.
உள்ளூரில் இக்குடும்பத்திற்கு
அரசியல் செல்வாக்கு உண்டு.
அண்மையில், அவர் காமாட்சிக்காடு
கிராமத்தைச் சேர்ந்த
அதிமுக தொண்டர் ஒருவரின்
மனைவி வீட்டில் தனியாக
இருக்கும்போது, அவரிடம்
'அத்துமீறிய' சம்பவம்,
சேலம் மாவட்ட இலை
கட்சியில் பரபரப்பை
ஏற்படுத்தி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜெகநாதன் மீது மல்லூர் காவல்நிலையத்தில் ப...