ஆடிட்டர் குருமூர்த்தி இப்படி பேசலாமா?
பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி, பொருளாதார அறிவு இல்லாதவர்கள்தான் பக்கோடா விற்பனை செய்வதை விமர்சிப்பார்கள் என்ற கருத்துக்கு, சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ, மரணம் அடைந்த பிறகு அதன் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. இவர் பாஜகவின் ஊதுகுழலாக அறியப்பட்டவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி.
கடந்த ஜனவரி இறுதியில் வானொலியில் 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''நாட்டில் பக்கோடா விற்பவர்கள்கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். அதுவும் வேலைவாய்ப்புதானே?'' என்றார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கடந்த மக்களவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தவறான பொருளாதார கொள்கைகள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ...