காற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு! நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே…!!
கடந்த 2010ம் ஆண்டில் சிபிராஜ், பிரசன்னா நடிப்பில் 'நாணயம்' படம் வெளியானது. அதில், 'நான் போகிறேன் மேலே மேலே... பூலோகமே காலின் கீழே...' என்ற டூயட் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். அந்தப்பாடலின் பல்லவியை இன்று (செப். 25, 2020) மெய்யாக்கி, கோடிக்கணக்கான ரசிகர்களை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார், ரசிகர்களால் 'பாடும் நிலா பாலு' என்றழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74).
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 4.6.1946ல் பிறந்த எஸ்.பி.பி.யின் முழு பெயர், ஸ்ரீபதி பண்டிதராத்யூலா பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட 16 மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் திரையிசை பாடல்களுக்கு மேல் பாடி, கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த எஸ்.பி.பி., கடந்த ஆகஸ்ட...