ஆணவக்கொலை: ஆடுபுலி ஆட்டம் இனி ஆரம்பம்! வருகிறார் ப.பா.மோகன்…! கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம்!!#Gokulraj
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் திடீரென்று அரசுத்தரப்பு வழக்கறிஞராக பவானி. பா.மோகனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது, இந்த வழக்கில் பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆணவக்கொலை:
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார். 2015, ஜூன் 23ம் தேதியன்று காலை, உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தோழி சுவாதியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
மறுநாளான 24.6.2015ம் தேதியன்று, கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்ப...