Sunday, March 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: OSMO

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இலங்கையில் உள்ள ஓஸ்மோ என்ற தனியார் உடற்பயிற்சி நிறுவனம் (ஜிம்), உடல் பருமனான பெண்களை பீப்பாயுடன் (பேரல்) ஒப்பிட்டு வைத்திருந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனத்தை இணையவாசிகள் தொடர்ந்து புரட்டி எடுத்து வருகின்றனர். உடல் பருமன் இன்று இளைய தலைமுறையினரை வாட்டி எடுக்கும் பிரச்சனையாக உள்ளது. ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உடல் பருமன் சமூக பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. மாறிவரும் உணவு பழக்கம், முறையற்ற வேலை நேரம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால், ஆண், பெண் என இருபாலினத்தவரும் பாதிக்கப்பட்டாலும், பெண்கள் அதனால் பலராலும் பொதுவெளியில் அவமானபடுத்தப்படுகின்றனர். உடற்பயிற்சி கூடங்களில் விளம்பரம் கூட பெண்களை மையப்படுத்திதான் உள்ளது. பெண்கள் இந்த வடிவத்திலும், அளவிலும் இருக்க வேண்டும் என்றே...