இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினியின் ‘#ஒரு நிமிஷம்-_ தலைசுத்திருச்சு!’
சினிமாவில் மட்டுமில்லாமல் தனது சொந்த வாழ்க்கையில் ரஜினிகாந்த் பேசிய பேச்சும் இப்போது டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி, விஜய், அஜீத், கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரையும் நெட்டிஸன்கள் கிண்டலடித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றதுடன், ஆன்மிக அரசியல்தான் தனது கொள்கை என்றும் அறிவித்தார். அப்போது பேசுகையில், ''திடீரென்று ஒரு டிவி கேமராமேன் என்னிடம் வந்து உங்க கட்சியின் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு,'' என்று பேசினார்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஜினிகாந்த் சொன்ன, 'ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு' என்ற பேச்சுதான் இன்று இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. '#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு' என்ற பெயரில் ஹேஸ்டேக் செய்துள்ளனர்.
...