முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!; சாஹல் அபாரம்!!
இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் துல்லிய தாக்குதலால், அந்த அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி, ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இன்று (டிசம்பர் 20, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது.
லோகேஷ் ராகுல் அரை சதம்:
டாஸ் வென்ற இலங்கை அணி, பனிப்பொழிவு காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கம் தந்தனர். ரோஹித் ஷர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது அரை சதம் ஆகும்.
ராகுல் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்....